கிழக்கு ப்ளஸ் – 10

இந்தச் சிறு தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்கள்மூலம் கிழக்கின் வளர்ச்சியின்பால் வாசகர்களுக்கு உள்ள அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது பேசிய சில விஷயங்களை நான் முன்பே பேசியிருந்தால் பல மனக்கசப்புகளை – இணையத்தில் தவிர்த்திருக்கலாமே என்று சில நண்பர்கள் கேட்டார்கள். என் பதில் இதுதான். பேசுவது என் தொழிலல்ல. இப்போது பேசியதன் ஒரே காரணம், உள்ளார்ந்த மகிழ்ச்சி. அதனைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியதன் விளைவு. வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பதிப்புத்…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 9

அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி. நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி, எப்படி விற்கிறது, எதை எடுக்கிறார்கள், எதை வெறுக்கிறார்கள், எது அதிகம் பில்லிங்குக்குப் போகிறது. கவனித்துக்கொண்டே போகிறோம். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி போன்ற இலக்கியப்…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 8

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும் முடியும். இதுதான் அடிப்படை. இது ஒன்றுதான் முக்கியம். [பத்திரிகைகளுக்கும் இதேதான்.] இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். ஏனெனில் நல்ல புத்தகங்களை எழுதக்கூடிய எழுத்தாளர்களைக்…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 7

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில் புத்தகம் அமையவேண்டுமென்பது. உண்மையில் கிழக்கு ஆரம்பிக்கும்போதுகூட நாங்கள் அத்தனை மெனக்கெடவில்லை. Prodigyயின் ஒவ்வொரு அம்சத்துக்கும் உயிரைவிட்டோம். முதலில் வழவழ தாளில் சற்றே பெரிய அளவில் முழுதும் வண்ணப்படங்களுடன்…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 6

முதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம். நானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். மிகப்பெரிய பதிப்பாளர்கள் முதல் சிறு வெளியீட்டாளர்கள் வரை அனைவருடைய புத்தகங்களையும் கவனிப்போம். ஒவ்வொரு டைட்டிலையும் குறித்துக்கொள்வோம். கவுண்ட்டர் அருகே கால் கடுக்க நின்று,…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 5

இதனை வழக்கமான கட்டுரை வடிவில்தான் வெளியிட நினைத்தேன். இன்று காலை பத்ரியின் வலைப்பதிவில் காண நேரிட்ட இந்த ஸ்லைட் ஷோ உத்தி என்னைக் கவர்ந்ததால், கேட்டு கற்றறிந்து அதனை முயற்சி செய்திருக்கிறேன்.கிழக்கு, வரம், நலம், Prodigy ஆசிரியர் குழுவில் உள்ளோருக்கு நாங்கள் வகுத்தளித்திருக்கும் அடிப்படை விதிகள் இவை. அனுபவங்களுக்கேற்ப அவ்வப்போது இதில் சேர்க்கைகள் நிகழ்வது வழக்கம். கிழக்கு ப்ளஸ் – பகுதி ஒன்றினை வாசிக்க . கிழக்கு ப்ளஸ் – பகுதி இரண்டினை வாசிக்க . கிழக்கு…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 4

ரத்தம் சொட்டச் சொட்ட காயம் பட்டபிறகு, செய்த தவறின் அடிப்படைக் காரணம், அறியாமை என்று தெரியவரும்போது வலியை மீறிய வேதனை ஒன்று வரும். ரத்த காயத்தைவிடத் தீவிரமானது அது. அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே இது விளங்கும். நாங்கள் தமிழ் பத்திரிகைச் சூழலில் பயின்றவர்கள். எல்லாம் கற்றுத்தரும் இந்த உலகம், காப்பிரைட் என்று ஒன்று இருப்பதை மட்டும் எப்போதும் மறைத்தே வைத்துவந்திருக்கிறது. படங்கள் விஷயத்தில் இது இன்னும் விசேஷம். Time, News Week, New Yorker, People, Mad…

Continue reading →

கிழக்கு ப்ளஸ் – 3

பகுதி 1 | பகுதி 2  தமிழ் பதிப்புலகம் ஒரு தாயற்ற குழந்தை. இங்கு எடிட்டர்கள் என்னும் இனம் இருந்து தழைத்ததில்லை. அவர்களது அவசியம் அல்லது முக்கியத்துவம் யாரும் உணரக்கூடியதாக இருந்ததில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பதிப்பாளர்களுக்கு மட்டும் இங்கு எடிட்டிங் ஓரளவு தெரியும். எடிட்டிங் என்றால் ப்ரூஃப் ரீடிங் என்பதே பொதுவில் அறியப்பட்ட நுட்பம். நூல்களுடன் வருடங்களைக் கழித்த அனுபவம் அவ்வப்போது போதித்த நுட்பம் அது. பதிப்பகத்துக்கு என்ன தேவை? எழுதுபவர்கள். மேலும்…

Continue reading →