பார்ட்டிப்ப்பாட்டு

இன்று கல்கி தீபாவளி மலர் உள்வந்திருக்கிறது. அதில் கோகுலம் பக்கங்களில் ஒரு பக்கமாக வெளிவந்திருக்கிற எனது உலக இலக்கியக் குழந்தைப் பாடல் பின்வருமாறு:-

பட்டு வீட்டுத் தோட்டத்தில் பார்ட்டி தொடங்கும் அமர்க்களம்
எட்டு தோழர், தோழியர் ஏரோப்ளேனில் வந்தனர்.

மிஸ்டர் பீனும் நாடியும் மீசை டோரி மானுடன்
சிஸ்டர் டோரா புஜ்ஜியும் சிறகடித்து வந்தனர்.

குண்டுகாலி யாவுக்கு கோட்டு பேண்ட்டு மாட்டியே
நண்பன் சோட்டா பீமுடன் நல்ல சுக்கி நாட்டியம்

பார்பி பாட்டு பாடுறாள் பார்க்க வந்த கிமோனாச்சி
ஆர்வ மாக குதிக்கிறான் அங்குமிங்கும் அலைகிறான்

ஆட்டம் பாட்டம் கூத்தெல்லாம் அட்டகாச மாகவே
வீட்டுத் தோட்ட வெளியிலே விடியும் வரை நடக்குது

ஹட்டோரிக்குப் பசிக்குது தாமஸ் ட்ரெயினில் டிபனெல்லாம்
எப்போ வந்து சேருமோ ஏங்கித் தவித்து நிற்கிறான்.

வீதி மக்கள் யாவரும் வியந்து நின்று பார்க்கவே
பாதி இரவு தாண்டியும் பார்ட்டி ஜோராய் நடக்குது

பட்டுவுக்குப் பெருமிதம் பார்ட்டி வெற்றி என்பதால்;
சுட்டித் தோழர் யாவரும் சுற்றி நின்று வாழ்த்தினர்

டிவிக்குள்ளே வாழ்வது தினமும் போரடிப்பதால்
தாவி வந்தோம் ஊருக்கு தேங்ஸ் உனக்கு என்றனர்

வாசல்வரை வந்தபின் வழியனுப்பி நின்றபின்
ஆசையுடன் பட்டுவும் அங்குமிங்கும் பார்க்கிறாள்

தூக்கம் தொலைந்து போனது துரத்தும் ஹோம் ஒர்க் இருக்குது
ஏக்கமுடன் கனவையே எண்ணிப் பார்த்தாள் பட்டுஸ்ரீ.

கனவில் நடந்த தாயினும் காலம் முழுதும் நினைவிலே
இனிய பார்ட்டியாகவே இருக்குமென்று நினைக்கிறாள்!

(நன்றியாகப்பட்டது, கல்கி தீபாவளி மலருக்கு.)

8 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற