பதிப்பு – திருச்சி – கருத்தரங்கம்

ஜூன் 3, தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை, கௌரா இலக்கிய மன்றமும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையமும் உலக தமிழ்ப் பதிப்பாளர் தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளன. இதனையொட்டி, ஜூன் 5 சனிக்கிழமை அன்று திருச்சியில் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறார்கள்.

இடம்: திருச்சி கலையரங்கம், மேல் தளம்
நேரம்: மாலை 5 மணி
தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுபவர்: த. சவுண்டையா, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்

இக்கருத்தரங்கில், நாளைய தலைமுறைக்கு பதிப்புத்துறை செய்யவேண்டியது என்ன என்பது பற்றி நான் உரையாற்றுகிறேன்.

கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பதிப்பாளர்கள்:

1. இன்றைய சூழலில் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நல்வாய்ப்புகள் – கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம்
2. நவீன தமிழ்ப் பதிப்புலகம் எதிர்கொள்ளும் சவால்கள் – உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன்
3. பதிப்புலகில் வெற்றிபெறுவது எப்படி? – சீதை/கௌரா பதிப்பகம் ராஜசேகரன்

கருத்தரங்கில், கேள்வி நேரம் உண்டு. பதிப்புத்துறை குறித்தும், பொதுவாக புத்தக வெளியிடுகள் தொடர்பாகவும், பேச்சாளர்களின் கருத்துரைகளின் அடிப்படையிலும் கேள்விகள் இருப்பின், வாசகர்கள் கேட்டுத் தெளிவு பெறலாம் என்று விழா அமைப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள வாசகர்களை, குறிப்பாகத் திருச்சியில் வசிக்கும் வாசகர்களை இக்கருத்தரங்குக்கு அன்புடன் அழைக்கிறேன்.

2 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற