கிழக்கு உலக சினிமா

வரும் ஞாயிற்றுக்கிழமை [6.6.2010] மாலை 5.30 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வருக.

இயக்கம் : Hany Abu-Assad
எழுத்து  : Hany Abu-Assad – Bero Beyer
ஒளிப்பதிவு : Antoine Heberle

2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது பெறாமல் போன படம் இது.

மனித வெடிகுண்டுகளாக டெல் அவிவுக்குள் நுழையும் இரண்டு பாலஸ்தீனிய இளைஞர்களைச் சுற்றி நிகழும் கதை என்று மேலோட்டமாக ஒரு வரியில் இப்படத்தைப் பற்றிச் சொல்வது அபத்தமாக இருக்கும். இடமும் இருப்பும் லட்சியங்களும் மயக்கங்களும் உறவும் உணர்வுகளும் முட்டிமோதும் அற்புதத்தை சொற்களில் விவரிக்க இயலாது. பார்க்கத்தான் வேண்டும்.

அனைவரும் வருக.

இப்படத்தைக் குறித்த விக்கிபீடியா குறிப்புகள் இங்கே.

*

இனி ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில்  ‘கிழக்கு உலக சினிமா திரையிடல்’ நடைபெறும். [வரும் ஞாயிறு மட்டும் மாலை 5.30க்கு] வலையுலகினர், கிழக்கு வாசகர்கள் அனைவரையும் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.