பரிசோதனை

சில ட்விட்டர் நண்பர்களின் ஆலோசனைப்படி விண்டோஸ் லைவ் எடிட்டரைத் தரவிறக்கம் செய்து அதில் இருந்து இத்தளத்தில் நேரடியாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.

இது ஒரு பரிசோதனைப் பதிவு. குறிப்பிட்ட விஷயம் ஏதுமில்லை. சில தினங்களாகவே நீண்ட கட்டுரைகள் எழுத நேரமில்லாமல் இருக்கிறது. செம்மொழி மாநாடு தொடர்பாகவே சில கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியாமல் போய்விட்டது. அவசரத் தொடர்புக்கு ட்விட்டர் போதுமானதாக இருக்கிறது.

பெரியார் ஈ.வெ.ரா. தவிரவும் இந்நாள்களில் எழுதுவதைவிட நிறையப் படிக்கிறேன். பெரியார் திராவிடர் கழகத்தினர், பெரியாரின் குடியரசுக் கட்டுரைகளை மின் நூல்களாகத் தொகுத்து இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். மிகப்பெரிய சேவை இது. தமிழ் சமூகம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

சும்மா படிக்கத் தொடங்கி, நிறுத்தவே முடியாத அளவுக்கு உள்ளே இழுத்துக்கொண்டோடுகிற எழுத்து. 1925ல் பெரியார் பயன்படுத்தியிருக்கும் தமிழைப் பார்க்க, அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே ஏற்படுகிறது. அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் யாருக்குமே எழுத்தில் அத்தனை எளிமை கிடையாது என்று அடித்துச் சொல்வேன். ஆத்திகராக இருந்த காலம் தொட்டு, காங்கிரஸ் தொண்டராக, காந்தி பக்தராக இருந்த நாள்தொட்டு அவர் எழுதிய கட்டுரைகளைக் கால வரிசையில் படித்துக்கொண்டிருக்கிறேன். முதல்பாகம் முடித்துவிட்டேன். இன்னும் ஒன்றிரண்டைப் படித்தபிறகு அது குறித்துச் சில கட்டுரைகள் எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

பரிசோதனைப் பதிவுக்கு 1138 வார்த்தைகள் அதிகம். எனவே இத்துடன்.

10 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற