சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்

வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது – பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன்.

சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எimageப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய அமர்வு ஒன்று உள்ளது. ‘நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?’ என்று சிறுவர்களே விவரிக்கும் தனி அமர்வு ஒன்றும் உண்டு.

தவிர, சிறுவர் புத்தகங்களுக்கு வரைதல் தொடர்பாக, மொழிமாற்றம் செய்வது தொடர்பாக, பல்வேறு வயதுக் குழந்தைகளுக்கேற்ற மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, மீபுனைவு எழுத்து தொடர்பாகத் தனித்தனி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விக்ரம் சேத், அனிதா ராய், ஷோபா டே, ப்ரீத்தி பால் போன்றவர்களோடுகூட மணி சங்கர ஐயர், ஷீலா தீக்‌ஷித் போன்ற சிலரும் இப்பயிலரங்கில் பேச வருகிறார்கள் என்பது சுவாரசியம். ஒரு சில வெளிநாட்டுச் சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள்.

புது தில்லி ஜெர்மன் புக் ஆபீஸ் நிறுவனம் இந்தப் பயிலரங்கை நடத்துகிறது.

5 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற