தவற விடுவது தவறு

தொடங்கி ஒரு மாதத்துக்குள் தீபாவளி வந்துவிட்டதால் தமிழ் பேப்பருக்கு இது தலை தீபாவளி.

நாளை தமிழ் பேப்பர் தீபாவளிச் சிறப்பிதழாக வெளிவருகிறது.

* தன்மீது வைக்கப்படும் கடுமையான விமரிசனங்களுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார் ஜெயமோகன் – விரிவான பேட்டி.

* ஆழி பெரிது என்று ஒரு தொடர் ஆரம்பிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையின் உலகுக்கு வாசகர்களை விரல் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

* அரவிந்தனுக்கு ஒரு ‘துணை’ வேண்டாமா? கார்ல் மார்க்ஸின் தோழர் ப்ரட்ரிக் எங்கெல்ஸின் வாழ்க்கை வரலாறைத் தொடராக எழுதுகிறார் மருதன்.

* அ. முத்துலிங்கத்தின் சிறப்புக்கட்டுரை உங்கள் ரசனைக்கு ஒரு விருந்து.

* யுவன் சந்திரசேகர் இம்மலருக்காக ஒரு சிறப்புச் சிறுகதை அளித்திருக்கிறார்.

* தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் கவிதை கிவிதை கலாட்டா இடம்பெறுகிறது.

* தமது விமரிசனக் கட்டுரைகளின்மூலமும் சர்ச்சைகள் மூலமும் மட்டுமே வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவரான ரோசா வசந்த், முதல் முறையாகத் தன்னைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார், சிறப்புப் பேட்டியில்.

* தீபாவளி ரிலீஸ் படங்களைப் பற்றி சங்கர் நாராயண் ஒரு முன்னோட்டம் வழங்குகிறார்.

* என்னுடைய சிறுகதை ஒன்றும் இடம்பெறுகிறது.

நாளைய தமிழ் பேப்பரைத் தவறவிடாதீர்கள். அனைவருக்கும் மனமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

6 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற