இந்த வருடம் என்ன செய்தேன்?

பல வருடங்களாக எழுதிக்கொண்டிருந்த காஷ்மீர், அயோத்தி தொடர்பான அலகாபாத் உயர்ந்தீமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதிய ஆர்.எஸ்.எஸ் – இரு நூல்களும் வருகிற ஜனவரி மாதம் வெளியாகின்றன. இந்த இரு புத்தகங்களைப் பற்றியுமே தனித்தனிக் குறிப்புகள் எழுத நினைத்திருந்தேன். நேரமின்மையால் தள்ளிப் போகிறது. விரைவில் எழுதிவிடப் பார்க்கிறேன். இது, நூல்கள் வெளிவருவதை உறுதி செய்யும் அறிவிப்பு மட்டுமே.

இவை தவிர, நான் முன்பே எழுதியிருந்தபடி அலகிலா விளையாட்டு நாவலின் மறுபதிப்பும் கொசு – நாவலின் முதல் பதிப்பும்கூட ஜனவரியில் வெளிவருகின்றன.

வருஷத்துக்கு நாலு புத்தகம் என்பது ஒரு அ-இலக்கியவாதிக்குச் சற்றே அதிகம்தான்.

6 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற