கிழக்கு பதிப்பகத்தில் வேலை காலி

எங்கள் அலுவலகத்தில் கீழ்க்கண்ட இரண்டு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம்.

 

1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator)

வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல்.

தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். கணினியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை; தமிழகம் முழுவதும் பயணம் செய்யவேண்டியிருக்கும்.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 – 12,000 (தகுதிக்கேற்ப) + இதரப் படிகள்.

2. இணைய மார்க்கெட்டிங் + விற்பனை பிரதிநிதி (Online Marketing & Sales Executive)

வேலை: இணையத்தளங்கள் மற்றும் கூகிள் வாயிலாக விளம்பரம் செய்தல்; ட்விட்டர், ஃபேஸ்புக், கூகிள் பஸ், வலைப்பதிவு, பிற சோஷியல் மீடியா நெட்வொர்க் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவித்தல்; கிழக்கு பதிப்பகத்தின் இணைய வர்த்தகத்தை நிர்வகித்தல்.

தகுதி: ஏதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் சரளமாக உரையாடவும் தெரிந்திருக்கவேண்டும். புத்தகம் படிப்பவராக இருத்தல் விரும்பத்தக்கது. கணினியை நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டும். இணைய நுட்பங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும்.

பணி இடம்: சென்னை.

மாதச் சம்பளம்: ரூ. 10,000 (தகுதிக்கேற்ப)

தொடர்புக்கு: 9500045611 / haranprasanna@gmail.com

 

11 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற