மூன்று வருடங்கள்

இன்று காலை உலவியைத் திறந்தவுடன் ட்விட்டரில் ஒரு செய்தி வந்திருந்தது. நான் அங்கு எழுதத் தொடங்கி இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகின்றன என்பதே அது. மகிழ ஒன்றுமில்லை என்றாலும் கிட்டத்தட்ட தினசரி நான் பயன்படுத்தியிருக்கிறேன். செய்திகள், தகவல்கள், வெண்பாம்கள், சிந்தனைகள், நகைச்சுவை, உரையாடல், விவாதம், விதண்டாவாதம், இலக்கியம், சினிமா, வெட்டிப்பேச்சு அனைத்துக்கும் அந்த இடம் எனக்கு சௌகரியமாக இருந்து வந்திருக்கிறது.

பலமுறை இனி இது வேண்டாம் என்று நினைத்தும், விடமுடியவில்லை. ஏனெனில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத பல அருமையான நட்புகளை அங்கே நான் சம்பாதித்திருக்கிறேன். எழுத்தைக் காட்டிலும் எனக்கு அதுதான் பெரிது.

இந்த மூன்றாண்டு காலத்தில் நான் எழுதியவை சுமார் ஆறாயிரம் ட்வீட்கள். அவற்றை இன்று மாலை திரும்ப ஒருமுறை வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். பெரும்பாலும் தகவல் பகிர்வுக்காகவே நான் இதைப் பயன்படுத்தி வந்திருப்பது தெரிந்தது. இருப்பினும் ஒரு சில ட்வீட்கள் ரசமாகவே இருந்தன. அவற்றுள் சில காலம் கடக்கும் என்றும் தோன்றியது. புரட்டிக்கொண்டோடிய வேகத்தில் எனக்குப் பிடித்த என்னுடைய சில ட்வீட்களை மட்டும் தனியே சேகரித்துத் தொகுத்துப் பார்த்ததில் 119 வந்தன. ஒழுங்காக உட்கார்ந்து தேர்வு செய்தால் இன்னும்கூட அகப்படலாம். அல்லது இதிலேயே சிலது நீக்கப்படலாம்.

என்னவானாலும் இவை என்னுடையவை. எனக்குப் பிடித்தவை. ஒருவேளை உங்களுக்கும் பிடிக்கலாம். இந்தக் குற்றியலுலகக் குறிப்புகளின் தொகுப்பை என் ட்விட்டர் நண்பர்கள் டைனோபாய், இலவசக் கொத்தனார், பெனாத்தல் சுரேஷ் மூவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

119 Tweets

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற