ஓர் அறிவிப்பு

இந்தத் தளத்தின் வலப்பக்கத்தில் ஒரு புதிய பகுதியை நீங்கள் காணலாம். இனி [கூடியவரை] தினசரி ஒரு நல்ல பாடலை இங்கே வழங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். சில கட்டுரைகளைப் பேச்சு வடிவிலும்கூட. உரையாடலாகச் சில விஷயங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. யாருடனாவது உரையாடி, தொகுத்து வழங்கும் திட்டம். எல்லாம் என்னுடைய தொழில்நுட்ப [அஞ்]ஞானம் எத்தனை கைகொடுக்கிறது என்பதைப் பொறுத்தது. இன்னும் ஆடியோ எடிட்டிங் பிடிபடவில்லை. சொதப்புகிறது.

பாடல்களைப் பொருத்தவரை, அவற்றின் தேர்வு முற்றிலும் என் ரசனை சார்ந்ததாகவே இருக்கும். அவசியமானவற்றுக்கு ராக / தாள விவரங்களையும் தரலாம். ரேடியோஸ்பதி – சே, றேடியோஸ்பதி செய்கிற காரியத்தையெல்லாம் பார்த்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. எளிய ஆசை. அவ்வளவே.

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பாடல் ‘இசையில் தொடங்குதம்மா’ ஹே ராம் படத்தில் இடம்பெற்றது. ஹம்சநாதத்தில் அமைந்த இந்தப் பாடல், அந்த ராகத்தின் சகல அழகையும் விரித்து வைக்கிறபடியால் எனக்கு முக்கியமாகிறது. அநேகமாக நான் தினசரி கேட்கிற ஒன்று. இதே ராகத்தில் இதே இளையராஜா இசையமைத்த மிகச் சாதாரணமான ஒரு பாடல், இதைக் காட்டிலும் பிரபலமானது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?

28 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற