ஆர்குட்டில் என் வாசகர் குழுமம்

ஆர்குட்டில் எனக்கொரு வாசகர் குழுமம் தொடங்கப்பட்டிருப்பதை நேற்று கண்டேன்.

பொதுவாக எனக்கு ஆர்குட் என்றால் அலர்ஜி. முன்பொரு சமயம் நண்பர்கள் அறிமுகப்படுத்தியபோது உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். பெரிதாக ஆர்வம் கவரவில்லை. வெளியேறி விட்டேன்.

பின்பு என்னுடைய ஜிமெயில் முகவரி களவு போன சமயம், ஒரு போலி ஆர்குட் முகவரியை நான் க்ளிக் செய்து உள்ளே சென்று கடவுச்சொல் கொடுத்ததுதான் காரணம் என்று நண்பர் இட்லிவடை சொன்னார்.

அதிலிருந்து மறந்தும்கூட ஆர்குட் பக்கம் போவதில்லை. எது போலியோ, எது உண்மையோ? யார் கண்டது?

இப்போது இந்த வாசகர் குழுமம் பற்றி அறிந்து, மீண்டும் உள்ளே சென்று பார்க்க, பலப்பல எழுத்தாளர்களுக்கான குழுமங்கள் ஆர்வமுடன் இயங்குவதைக் கண்டேன்.

என்ன ஒரே பிரச்னை, ஆர்வத்தில் புத்தகங்களையெல்லாம் பத்து பைசா செலவில்லாமல் Print PDF போட்டு நாட்டுடைமை ஆக்கிவிடுகிறார்கள். படித்துவிட்டு ஆளுக்கு நாலு வரி பாராட்டியும் விடுகிறார்கள். இணையத்தில் இது தவிர்க்க முடியாதது என்பது புரிகிறது. ஒன்றும் செய்வதற்கில்லை.

சம்பந்தப்பட்ட இந்த ரசிகர் குழுமம் எனது டிரேட் மார்க்கான 😉 ‘கோயிஞ்சாமி’யைக் கூட விட்டுவைக்கவில்லை. குகனொடு ஐவரானது மாதிரி கோயிஞ்சாமியுடன் ஐக்கியமாகியிருக்கிறார்கள்.

மங்களம் உண்டாகட்டும். இவர்களுடைய முகவரி இங்கே உள்ளது.

17 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற