அதிமுக்கிய அறிவிப்பு

என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை – கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது.

இந்நூலின் தனிச்சிறப்பு என்பது, தமிழன் வாங்கக்கூடிய சகாய விலையில் இது வெளிவந்திருப்பது. (ரூ. 40) வாசிக்கவும் நன்றாக இருக்கும் என்பது இரண்டாம் தனிச்சிறப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதில் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், சரித்திரம், சாப்பாடு, சங்கீதம், சினிமா, தொலைக்காட்சி, விளையாட்டு, சாராயம் உள்ளிட்ட சகலவிதமான நூதனாதி விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே இத்தனை பல்வேறுதரப்பட்ட சங்கதிகளை ஒரே நூலில் விவாதிப்பதென்பது இதுவே முதல் முறை என்பது வாசகப் பெருமக்களுக்குத் தெரியும் என்பதால் அது குறித்துப் பெரிதாகப் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.

மேற்கண்ட புகைப்படத்தில், குற்றியலுலகம் நூல் வெளியாகிவிட்ட தகவலை எடுத்துக்காட்டி அறிவிப்பவர், என் நண்பர் பார்த்தசாரதி.

நாளை கண்காட்சிக்குச் செல்ல உத்தேசிக்கிறேன் என்பது உபரித் தகவல்.

11 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற