இது நான் எழுதியதல்ல.

எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அவர்களுக்கு எழுதும் பழக்கமெல்லாம் எனக்குத் தெரிந்து கிடையாது. திடீரென்று இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பிடிஎஃப் கோப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது.

என்னுடைய இரண்டாவது தம்பி ஜகந்நாதன் அதனை அனுப்பியிருந்தான். தனது அலுவலக நண்பர்களுக்கு அனுப்பிய கடிதம் என்று குறிப்பிட்டிருந்தான். முதல் முறையாகத் தமிழில். கூகுள் டிரான்ஸ்லிட்ரேஷனில் இதனை முயற்சி செய்ததாகவும் தெரிவித்திருந்தான்.

ஃபேஸ்புக்குக்குப் புதிதாக நுழைந்த தனது முதல் நாள் அனுபவத்தை அவன் எழுதியிருந்த விதம், அவனுக்குள் ஓர் எழுத்தாளன் இருப்பதை எனக்குச் சொன்னது. தூண்டிவிட்டோ, ஊக்குவித்தோ உருப்படுகிற ஜாதியில்லை. எனவே நான் ஏதும் சொல்லப் போவதில்லை. என்றாவது அவனுக்கே அது தோன்றும். அன்று ஒரு நல்ல ரைட்டர் பிறப்பான்.

அவன் அனுப்பிய பிடிஎஃப் கோப்பு கீழே இருக்கிறது. நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

Facebook anubhavangal

23 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற