மலிவு விலையில் மாயவலை

சில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன.

பாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன.

ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் குறைந்தது இன்னும் 15 புத்தகங்களாவது மறுபதிப்பில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அத்துடன் ஒரு புதிய புத்தகமும் வெளியாகக் கூடும். அதைப் பற்றிய விவரங்களைப் பின்னர் தருகிறேன்.

மேற்கண்ட புத்தகங்களைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு நீங்கள் mathinilayambooks@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அல்லது 044-28111506 என்னும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாம்.

ஒரு முக்கியமான விஷயம். எனது மாயவலையை வாசிக்க விரும்பிய பல வாசகர்கள் அதன் விலை காரணமாகவே (முதலில் 750. பிறகு 900) பயந்து ஓடிய காட்சியைப் புத்தகக் கண்காட்சிகளில் நேரில் பார்த்திருக்கிறேன். 1200 பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகத்தை அதைக்காட்டிலும் குறைந்த விலையில் எப்படிக் கொண்டுவருவது என்று அப்போது தெரியவில்லை. அதையும் மீறி அந்நூல் நன்றாகவே விற்பனையானது.

இப்போது இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய பதிப்பை 500 ரூபாய்க்குள் [இதைக்கூட மலிவுப் பதிப்பு என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது.] கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் குறைந்த அளவு பிரதிகள் மட்டுமே [600 பிரதிகள்] அச்சிடப்படும். புத்தகம் வேண்டும் வாசகர்கள் இப்போதே மதிநிலையத்தில் முன்பதிவு செய்து கொண்டால் ஜனவரியில் புத்தகம் கிடைப்பதில் சிரமம் இராது. முன்பதிவு செய்வோர் எண்ணிக்கையைப் பொறுத்து பதிப்பாளர் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கூடும்.

சரியான விலை விவரம் தீர்மானமானபிறகு சொல்கிறேன். ஆனால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி துண்டு போட்டுவைக்கத் தடையில்லை.

5 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற