ஓர் அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி குறித்த பதிவுகள் அடுத்து வரும் தினங்களில் இங்கு அதிகம் இடம்பெறும். அநேகமாக அவை மட்டுமேகூட இடம்பெறலாம். பதிவாக வெளியிட வேண்டிய அளவு அவசியமற்ற சுருக்கமான தகவல்களை ட்விட்டரில் அப்டேட் செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதுவும் உடனுக்குடன் இந்தத் தளத்திலேயே வாசிக்கக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். இந்தக் காரணங்களால்…

இந்தக் காரணங்களால், இந்தத் தளத்தின் தோற்றத்தில் சில மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது. முகப்பில் இதுநாள் வரை ஒரே ஒரு பதிவு மட்டுமே இடம்பெற்று வந்தது. இப்போது ஐந்து பதிவுகள் இங்கு இடம்பெறும்.

இந்த மாற்றத்தைச் செய்ய நேர்ந்தபோது பிழையாக எதையோ தொட்டுவிட, கூகுள் ரீடரில் வாசிப்போருக்கு இன்று மதியம் முழுதும் இந்தத் தளத்துப் பதிவுகளைப் படிப்பதில் பிரச்னை இருந்திருப்பதாகத் தெரிகிறது. நானொரு நாடறிந்த அரைகுறை தொழில்நுட்ப மாணவன்தான் என்பதால் இதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கும் உத்தேசமில்லை. பொறுத்துக்கொள்ளவும்! கி.பி. 2004ல் இருந்து நான் வலைப்பதிவு எழுத எல்லாவித தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வரும் கணேஷ் சந்திரா என்னை இப்படித்தான் சகித்துக்கொண்டு வருகிறார் என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவருக்கு உங்கள் அனுதாபங்களைத் தெரிவிக்க இது ஒரு சந்தர்ப்பம்.

கண்காட்சி வளாகத்திலேயே இணைய வசதி இருக்கும் என்று தெரிகிறது. எனவே அவ்வப்போதைய செய்திகளை உடனுக்குடன் வழங்கப் பார்க்கிறேன். புகைப்படங்களையும் உடனுக்குடன் வலையேற்ற பத்ரி பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் பத்து தினங்களிலும் வாசகர்களுக்கு அது பற்றிய அனைத்து விவரங்களையும் ஒழுங்காகத் தரவேண்டும் என்பது திட்டம்.

கண்காட்சிக்கு வர இயலாதவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

4 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.