Media

தம்பி வெட்டோத்தி சுந்தரம் -  JS 24 Frames ஜே. செந்தில்குமார் தயாரிக்கும் இப்படத்தை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். கரண், அஞ்சலி, கஞ்சா கருப்பு, வெண்ணிற ஆடை மூர்த்தி, நந்தா சரவணன், காதல் தண்டபாணி ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு இசை வித்யாசாகர். ஒளிப்பதிவு ஆஞ்சநேயலு. பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். நான் வசனம் எழுதுகிறேன்.

கனகவேல் காக்க – ஆகர்ஷினி தியேட்டர்ஸ் ஆர். சரவணா தயாரிப்பில், கவின் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம். [மே 21, 2010 அன்று வெளியானது.] கரண், ஹரிப்ரியா, கோட்டா ஸ்ரீனிவாசராவ், சம்பத், ஆதித்யா, பாண்டு நடித்திருக்கும் இப்படத்துக்கு இசை விஜய் ஆண்டனி. நான் வசனம் எழுதிய முதல் திரைப்படம்.

சிவசக்தி – ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா தொடர். சுந்தரமூர்த்தி இயக்கிய இத்தொடருக்கு வசனம் நான்.

கெட்டிமேளம் – நடிகை ஜெயசுதா – நித்தின் கபூர் தயாரிப்பில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மெகா தொடர். விக்கிரமாதித்யன் இயக்கத்தில் வெளியான இந்தத் தொடருக்குக் கதை வசனம் எழுதினேன்.

Comments are closed.