நெருப்பை நீரினால்தான் அணைக்க முடியும். இருளை ஒளியினால்தான் நிரப்ப முடியும். தனித்திருப்பதே பெருங்கூட்டத்தை ஆள்வதற்கு வசதி. இந்த எதிர்நிலை ஏற்பாடு, இயற்கையின் சூக்குமங்களுள் முக்கியமானது. உரியை ஒரு சார்வாகனும் ஒரு சித்தரும் கட்டியிழுத்துச் செல்வார்கள். இருவேறு விதமான சிந்தனைப் பள்ளியின் முழுமைக்குள் வாழ்பவர்கள் அவர்கள். இருவருக்கும் பொதுவானவை என்றால் சாதி மதமின்மை, உருவ வழிபாடின்மை, சடங்குகள்...
உரி: சில குறிப்புகள் – 6
சரித்திரம் சில வினாக்களுக்குத் தெளிவான விடை தரும். சிலவற்றுக்கு எவ்வளவு தேடினாலும் அகப்படாது. கவனியுங்கள். அது அகப்படாததுதான். இல்லாததென்றோ, கிடையாதென்றோ ஒன்றில்லை. உரியின் பொருட்டு இராஜராஜ சோழனின் காலம் குறித்த ஆய்வறிஞர்களின் புத்தகங்கள் அனைத்தையும் வரிசையாகப் படித்துக்கொண்டிருந்த நாள்களில் அத்தகு விடையற்ற வினா ஒன்று அனைத்துக்கும் மேலாக எழுந்து சூழ்ந்து நின்றது. ஆட்சிக்கு வந்த நாள் முதல்...
உரி: சில குறிப்புகள் – 5
இதற்குமுன் இப்படிச் செய்ததில்லை. இம்முறை இந்த விதமான எழுத்து முறையைத் தவிர்க்கவும் முடியவில்லை. உரியின் ஒவ்வோர் அத்தியாயமும் கருக்கொண்டதும் அதை முதலில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எனக்கு மட்டும் புரியும் வடிவத்தில் சுருக்கமாக எழுதிக்கொண்டுவிடுகிறேன். அநேகமாகப் படித்துப் பார்ப்பதுகூட இல்லை. காகிதத்தில் எழுதிப் பார்க்கத் தோன்றுவதால் எழுதுகிறேன். பிறகு மூடி வைத்துவிட்டுச் சிறிது நேரத்துக்குப் பிறகு...
உரி: சில குறிப்புகள் – 4
உருவற்ற பரம்பொருளை நிர்க்குண பிரம்மம் என்றும் மாயை போர்த்திய அதன் வடிவத்தைச் சகுண பிரம்மம் என்றும் சுட்டுவது வழக்கம். மாயையைப் பொதுவாக மதமும் அது நிகர்த்த மற்றவையும் போர்த்தும். ஆனால் இந்த உருவற்ற நிலைக்கும் உருவுள்ள நிலைக்கும் இடையில் இன்னொன்று இருந்தாலென்ன என்று தோன்றியது. உருதானா முக்கியம்? ஒலி இல்லையா? பொருள் இல்லையா? ஆதியிலே வார்த்தை இருந்தது; அது தேவனிடத்தில் இருந்தது. அதுவே தேவனாகவும்...
உரி: சில குறிப்புகள் – 3
மனிதனால் முடியாத ஒன்றில்லை என்று திடமாக நம்புபவன் நான். ஒன்று முடியவில்லை என்றால் முயற்சி போதாது என்பது மட்டுமே பொருள். அறிவுக்குப் புலப்படாதவற்றை அற்புதமென்றும் அதிசயமென்றும் வகைப்படுத்திவிடுகிறோம். திரை விலகும்போது அனைத்தும் சாதாரணமாகிவிடுகின்றன. அப்படி இன்னும் விலகாத திரைகளின் மீதுதான் பெரும் படைப்புகள் எழுதப்படுகின்றன. உரியை எழுதத் தொடங்கியபோது, இதெல்லாம் நடக்கிற கதையா? என்று ஒவ்வொரு...
நாளைய விழா
BukPet இன் WriteRoom எழுத்துப் பயிற்சிக் குழுமத்தின் ஆறாம் ஆண்டு விழா நாளை காந்தி ஜெயந்தித் திருநாளன்று மாலை இந்திய நேரம் ஏழு மணிக்கு Zoom வாயிலாக நடைபெறுகிறது. விடாப்பிடியாக இந்த விழாவை ஒவ்வோர் ஆண்டும் zoom வாயிலாக மட்டுமே நடத்துவதற்கு ஒரே காரணம்தான். உலகெங்கும் உள்ள WriteRoom மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். வாட்சப் என்ற ஒன்று வந்த பிறகு எல்லோரும் எப்போதும் அருகிலேயேதான் வசிக்கிறோம்...
உரி: சில குறிப்புகள் – 2
நீங்கள் ஒரு சரித்திரக் கதை எழுதுவீர்களா என்னும் வினாவை இதுவரை குறைந்தது பத்து முறையேனும் பேட்டிகளில் எதிர்கொண்டிருப்பேன். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வாசகர்கள் கேட்டதைச் சேர்த்தால் குறைந்தது நூறு முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் மாட்டேன் என்பதற்கு அப்பால் இன்னொரு பதிலைச் சொன்ன நினைவில்லை. என்னால் ஒரு சரித்திரக் கதையை எழுத முடியும் என்று இன்றுவரை நான் நம்பவில்லை. புழக்கத்தில் உள்ள பல...
உரி: சில குறிப்புகள் – 1
யதி எழுதிய நாள்களில் சிறிது பித்தேறிக் கிடந்தேன். கண்ணெதிரே நிகழ்வனவும் காதருகே வந்து சொல்லிவிட்டுச் செல்வனவும்கூடச் சிந்தையில் ஏற மறுத்த நாள்கள் நினைவிருக்கின்றன. தொடங்கும்போதோ முடிக்கும்போதோ அல்ல. இடையில் சில மாதங்கள் அவ்வாறு இருந்தன. பிறகு சுதாரித்துக்கொண்டேன். சலம் முற்றிலுமே என்னைப் புரட்டியெடுத்துவிடுமென்று நினைத்தேன். அதன் காலமும் (கிமு 1000-1200) களமும் மொழியும் எனக்கு அந்நியமானவை. நீண்ட...
செப்டெம்பர் மாத எழுத்து வகுப்புகள் – அறிவிப்பு
செப்டெம்பர் மாத எழுத்துப் பயிற்சி வகுப்புகள், ஐந்தாம் தேதி தொடங்குகின்றன. வழக்கம் போல நான்கு பாடங்கள் (Fiction, Non Fiction, Social Media, Style), நான்கு வார இறுதிகள், எட்டு வகுப்புகள், பதினாறு மணி நேரம். ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் இந்திய நேரம் மாலை ஏழு மணி முதல் ஒன்பது வரை வகுப்புகள் நடைபெறும். வகுப்புக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து பெறலாம்...
பொருளடக்கமில்லாத புத்தகம்
தோற்றத்தில் நான் நல்ல கறுப்பு. எனக்கு அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் எனக்குத் திருமணமான புதிதில் என் அம்மாவுக்கு அது குறித்த சிறிய பதற்றம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் என் மனைவி வெள்ளையாக இருப்பாள்...


