ஓர் எதிர்வினை

ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர் கட்டுரைக்கு ‘உருப்படாதது’ நாராயணனின் எதிர்வினை இது:

வன்முறை/வன்மம் என்பது உள்ளார்ந்த விஷயம். கொலைகளும், தற்கொலைகளும் அறிவுக்கு எதிரானவையல்ல. சாமானியர்களுக்கு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், உலகின் முக்கியமான intellectuals, artists  எல்லோரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். Emotional Intelligence என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடக் கூடிய விஷயம். உயிரெடுத்தல் அல்லது உயிர் துறத்தல் இரண்டுமே உச்சபட்ச ஞானி நிலையிலிருக்கும்போது தான் செய்ய முடியும். பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ? EI  இல்லாமலா செய்திருப்பார். அவரைப் போல, கொலையினை ஒரு கருவியாகவும், இயல்பாகவும் எடுத்துக்கொள்ளும் கொஞ்ச பேரினை எனக்கு தெரியும். வடசென்னையிலிருந்து வந்ததின் விளைவால், உயிர் மீதான் பயம்/அவசியம்/வெறுப்பு என்பது பெரிதாக எதுவுமில்லை. அதே போல தான் தற்கொலையும் எனக்கு.

“பொண்டாட்டி மேல சந்தேகம் வந்துச்சு. போட்டேன் ஒரே போடு. தலையோட இந்தா சார்” – என்று சரணடையும் சாமானியர்களுக்கும், ஒரு உயிரை எடுத்தால் அதன்பின் இருக்கும் விளைவுகளை ஆற அமர யோசித்து பின் உயிரெடுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமிருக்கிறது. அவர்களைப் பொருத்தவரை உயிரெடுத்தல் என்பது ஒருவிதமான cleansing mechanism. Psychopath கள் இந்த வகையில் வருவார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் ஒருவன், சூழ்நிலை மற்றும் காரணிகளால் ஒரு உயிரை பறிக்கவோ, துறக்கவோ நேரும் போது அவனுக்கு இருக்கும் focus மற்றும் undiluted attention to the detail வேறெந்த நிலையிலும் வாராது.

தனிப்பட்ட முறையில், வன்மம் பெருக்கெடுத்து ஒடும் “அந்தப்புரம்” பிரகாஷ்ராஜுக்கு ஈடான அதனினும் மேலான வன்மமும், வன்முறையும் உள்ளவன் நான். அதனால் தான் வாழ்வில் sensitive ஆக இருக்க முடிகிறது. முரண்பாடாக தோன்றினாலும், உண்மை அதுவே.

ஆர்.எல். நாராயணன்
சென்னை

Buy Kindle EBooks

அச்சுப் புத்தகங்கள் வாங்க

புதியவை

இதுவரை

மின்னஞ்சலில் வாசிக்க

RSS Feeds

Links

Some of the links provided in this website are affiliate links.