Menu Close

ரொம்ப முக்கியம்.

[tabs slidertype=”left tabs”] [tabcontainer] [tabtext]அறிமுகம்[/tabtext] [tabtext]அதிகாரம் 1[/tabtext] [tabtext]அதிகாரம் 2[/tabtext] [tabtext]அதிகாரம் 3[/tabtext] [tabtext]அதிகாரம் 4[/tabtext] [/tabcontainer] [tabcontent] [tab]நேற்று ராத்திரி மெக்சிகன் பிஸ்ஸா சாப்பிட்டேன். ரொம்ப ருசியாக இருந்தது. இன்னும் இதற்கு சரியான சைட் டிஷ் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே என் கருத்து. மிளகுத் தூள், அசட்டுத் தித்திப்பும் அரைப் புளிப்புமான கெச்சப்பு வகைகள் போன்றவையெல்லாம் ரசனையற்றவர்களின் கண்டுபிடிப்புகள். எனக்கென்னவோ வெஜிடேரியன் பிஸ்ஸா வகைகளுக்கு நல்ல ஆவக்காய் ஊறுகாய் அல்லது அதிகம் புளிக்காத வத்தக்குழம்பு அல்லது இஞ்சி, கருவேப்பிலை, மிளகு, உளுத்தம்பருக்கு சேர்த்து அரைத்த துவையல் [திவசத் துவையல் என்றும் பாடம்] சரியான துணையாக இருக்கும் என்று தோன்றுகிறது. முயற்சி செய்து பாருங்கள். பிஸ்ஸாவையேகூட வீட்டில் செய்து பார்க்கலாம். அதிகாரம் 1லிருந்து அந்தப் பாடம் ஆரம்பம். [/tab] [tab]அடிப்படைப் பொருள் மைதா மாவு. ஒரு மூன்று பிடி எடுத்துப் போடுங்கள். ஆலிவ் எண்ணெய், ஈஸ்ட் [கிழக்கு அல்ல], சர்க்கரை, உப்பு இவை தலா ஒரு ஸ்பூன். ஒரு முக்கால் தம்ளர் தண்ணீர். அப்புறம் சரக்குக்கு ருசி சேர்க்க சீஸ் [உறை நிலையிலிருந்து உதிர்த்து] ஒரு கப், குடைமிளகாய் ஒன்று, வெங்காயம் ஒன்று, தக்காளி சாஸ், வாசனைக்குக் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய்.[/tab] [tab]தக்காளி சாஸைக்கூட வீட்டிலேயே செய்ய முடியும். தேவை கொஞ்சம் பொறுமை. நல்ல கொதிக்கும் தண்ணீரில் பெங்களூர் தக்காளியைப் போட்டுக் கொஞ்சம் வேகவிட்டு எடுத்து, கை சுடச்சுட அதன் தோலை உரித்துவிட வேண்டும். மறுபக்கம் வாணலியில் ஆலிவ் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி, இந்த வெங்காயம், வெள்ளைப்பூண்டு, குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றைத் துண்டாக்கிப் போட்டு ரெடியாக வதக்கி வைக்கவும். இது கொழகொழ என்றாகும்வரை வதங்கவேண்டும். அப்புறம் வேகவைத்துத் தோலுரித்த தக்காளிகளை எடுத்து இதன் தலையில் போட்டுத் திரும்பவும் வதக்கவேண்டும். அவ்வப்போது தண்ணீர் சேர்க்க மறவாதீர். நன்கு வெந்து கெட்டியாகத் திரளும் நேரத்தில் சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டால் சாஸ் தயார்.[/tab] [tab]அடுத்து பிஸ்ஸா செய்யும் கட்டம். குளுமை இல்லாத குடிநீரில் சர்க்கரையையும் ஈஸ்டையும் போட்டு ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் அப்படியே வையுங்கள். மைதா மாவு வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதை இப்போது எடுங்கள். கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, மேற்படி சர்க்கரை ஈஸ்ட் தண்ணீரை அதன் தலையில் கொட்டுங்கள். இதை பூரி மாவு பிசைவது மாதிரி பிசைந்து ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள். சுமார் இரண்டு மணிநேரம் தியானம் செய்யவும். அதற்குள் மாவு, அதில் கலந்த ஈஸ்டின் உபயத்தால் கொஞ்சம் குண்டடித்திருக்கும். தீர்ந்தது விஷயம். எடுத்து வடை தட்டுவது மாதிரி தட்டி வைத்தால் சரக்கு ரெடி. இதன்மீது முதலில் தக்காளி சாஸை ஊற்றவேண்டும். அதன்மீது குடைமிளகாய், வெங்காயம், சீஸ் என்று என்னென்ன வைத்திருக்கிறீர்களோ அவற்றை அடுக்கவேண்டும். இந்த அலங்கார களேபரத்தை அப்படியே தூக்கி மைக்ரோவேவில் வைத்து, பதினைந்து நிமிடம் கழித்து எடுத்தால் பிஸ்ஸா ரெடி.[/tab] [tab]திடீரென்று எதற்கு இந்த பிஸ்ஸா செய்முறை என்று கேட்கத் தோன்றினால் நீங்கள் இன்னும் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். இந்த tabbed post ஆப்ஷனை டெஸ்ட் செய்வதற்காகவே இந்த ச.குறிப்பு என்பதைச் சரியாக யூகித்திருப்பீரானால் உங்களுக்கு ஒரு பாராட்டு.[/tab] [/tabcontent] [/tabs]

26 Comments

 1. பரிசல்காரன்

  உண்மையாக நான் அதிகாரம் ஒவ்வொன்றையும் படிக்கவில்லை. எப்படி இப்படி tabல் எழுத முடிகிறது என்று வியந்தவாறே தாவிக் கொண்டிருந்தேன். கடைசி அதிகாரம்.. அபாரம்.

  வடிவமைத்தவருக்கு பொன்மாலை.

 2. writerpara

  கிருஷ்ணா, இந்த தீமிலேயே இன் பில்டாக இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இதே டேபை அரங்கநாதன் மாதிரி படுத்த வாக்கிலும் அமைக்கலாம். வேர்ட் ப்ரஸ் பிளகின் லைப்ரரியில் சில டேப் பிளகின்கள் உள்ளன. ஆனால் அனைத்தும் ரொம்ப பேஜார் பண்ணுகின்றன.

 3. R.Ravichadra

  புதுமையாக இருக்கிறது. இதை எவ்வாறு சாத்தியமாக்கினீர்கள்?

 4. Srividhya Balasubramaniam

  great post. it seems you know the art of cooking too. your wife is blessed ;))))))

 5. Parthasarathi Jayabalan

  பாரா – நீங்கள் தலையில் தொப்பி வைத்துக் கொண்டு, உடம்பில் செஃப்கள் கட்டுவார்களே அந்தத் துணியைக் கட்டிக் கொண்டு
  பீட்ஸா சுடுவது போல் நினைத்துப் பார்த்தேன்…சிரிப்பு குபீர் குபீர் என்று கிளம்புகிறது..

  அப்புறம் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி..இதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்..
  காலையில் எழுந்ததில் இருந்து இந்த விஷயம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது..

  நீங்கள் உலக இலக்கியவாதிகளைப் படித்திருக்கிறீர்களா?

  பதில் சொல்லுங்கள் ப்ளீஸ். ஏன் என்று நீங்கள் பதில் சொன்னால் சொல்கிறேன்.
  காலையில் இருந்து மண்டை காய்கிறது

  அன்புடன்
  பார்த்தசாரதி ஜெயபாலன்

 6. writerpara

  பார்த்தசாரதி ஜெயபாலன்: ஏன் திடீரென்று இப்படி ஒரு கேள்வி? உலக இலக்கியவாதிகள் என்போர் யார்? உலக சினிமாக்காரர்களுக்கு பக்கத்து போர்ஷன்காரர்களா? எனக்குத் தெரியாது. நான் சில நல்ல இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் சில தப்பித்தவறி உலக இலக்கியமாகவும் இருக்கலாம்.

 7. Parthasarathi Jayabalan

  தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று ஒரு கனவு கண்டேன்.

  நீங்கள் அர்த்த ராத்திரியில், அரை நிஜாருடன் அண்ணா சாலையில் ஓடுவது மாதிரியும்,

  உங்களை அண்டன் செகாவ் துரத்தி வருவது மாதிரியும் கனவு வந்தது.

  இது ஏன் வந்தது,எப்படி வந்தது என்றூ காலையில் இருந்து பயங்கரக் குழப்பமாக இருக்கிறது.

  அதை நினைத்தால் சிரிப்பாகவும் இருக்கிறது.

 8. writerpara

  பார்த்தசாரதி ஜெயபாலன்: உங்கள் கனவு நன்றாகவே உள்ளது. ஆனால் ஆண்டன் செகாவ் என்னைத் துரத்த வாய்ப்பில்லை. வேண்டுமானால் ரைட்டர்பேயோனைத் துரத்துவார்.

 9. Annamalai

  Blogger world is Fascinating.
  Freedom to write anything.
  People are there to appreceate anything.
  god bless them

 10. writerpara

  திரு. அண்ணாமலை: நீங்களொரு நல்ல மைக்ரோவேவ்! இதே சூட்டுப் பதம்தான் பிஸ்ஸா வேகவும் தேவைப்படும்.

 11. ஒருவாசகன்

  சுயதம்பட்டம் அல்ல…. உங்களை உண்மையிலேயே புரிந்துகொண்டவன் என்பதை நினைக்க எனக்குப் பெருமையாகவுள்ளது……. பாரா தனது புது கண்டுபிடிப்பை பறைசாற்ற இப்படி ஒரு பில்டப் கொடுக்கின்றார் போல் உள்ளது என நினைத்த படியே படித்துக் கொண்டு வந்தேன். அப்படியே அதிகாரம் நாலில் எழுதிவிட்டீர்கள்.

  ஒரு யோசனை/வேண்டுகோள்:
  நீலக்காகம் தொடரும் மனநிலைக்கு நீங்கள் வந்தால், நீலக்காகம் தொடரும் போது (தொடர்ந்தால்) இந்த tabbed post optionஇல் முந்தைய அத்தியாயங்களை அமையுங்கள்

 12. writerpara

  ஒருவாசக நண்பருக்கு: நீலக்காகம் கண்டிப்பாக எழுதி முடிக்கப்படும். ஆனால் இப்போது முடியுமா என்று தெரியவில்லை. உண்மையில், இப்போது என் முன் உள்ள பணிகள், அவற்றின் தன்மை, அது சார்ந்த என் மனநிலை எல்லாமே நாவல் எழுத்துக்கு எதிராக உள்ளன. நான் அதை ஆரம்பித்த வேளை சரியில்லை என்று நினைக்கிறேன்.

 13. Srinarayanan

  Para,

  Pizzala poduradhu thakkali sauce (Ketchup endrum paadam :-)) illa. Adhukku peru marinara sauce. The main ingredients for that are basil leaves, olive oil and garlic.

 14. V.Rajasekar

  நீ.கா எழுதும் சூழல் வந்தவுடன் எழுதி தள்ளுங்கள் சார் !
  நாங்கள் எப்போதும் அதற்காகதான் காத்துகொண்டிருக்கிறோம் !!!

 15. Venkat

  PaRa, If NeelaKagam is not possible in near future, please write a NeelaKurvi atleast (A mini series) 🙂

  Regards
  Venkataraghavan S

 16. Kannan

  பாரா, ஸ்பெக் (specification ) மிஸ்ஸிங். மைக்ரோவேவ்ல எவ்வளவு சூட்டுல வைக்கணும், என்ன செட்டிங்ன்னு எழுதி இருந்தால் உங்கள் பாவத்தில் ஒரு பத்து பெர்சென்ட் குறைந்து இருக்கும்!

 17. writerpara

  யார் கண்டது? என் வாழ்நாளில் மைக்ரோவேவை ஒருமுறையும் தொட்டதில்லை. இதெல்லாம் வெறும் கேள்வி ஞானம்தான். தவிரவும் என்னுடையதைப் படித்துவிட்டு சமைத்துப் பார்க்குமளவுக்குத் தமிழ்ப் பெண்கள் தரம் தாழ்ந்துவிடவில்லை என்று திடமாக நம்புகிறேன். இந்தக் குறிப்பின் நோக்கத்தைத்தான் அதிகாரம் 4ல் தெளிவாகச் சொல்லிவிட்டேனே? அதன்பிறகும் நீங்கள் இப்படியெல்லாம் கேட்பது அநியாயம் ஆகும்.

 18. virutcham

  pizza வுக்கு சுவை சேர்க்கும் சமாச்சாரங்களில் மிக முக்கியமான ஒன்னு இருக்கு. அது நம்ம திருப்பதி பழனி போன்ற இடங்களில் இருந்து பக்த கோடிகள் தாராளமாய் காணிக்கையாக தாரை வார்க்கும் சமாசாரம் ஏற்றுமதியாகி பொடியாகி சுவை மற்றும் , மொருமொருப்பு உண்டாக்கும் காரணிகளுக்காக மலிவுவிலை காரணமாகவும் சேர்க்கப்படுகிறது.

  http://www.virutcham.com/2010/12/4471/ (Like to have some hair Pizza???)

 19. writerpara

  விருட்சம்: இப்படிக் குலைநடுங்கச் செய்துவிட்டீர்களே. இனி அந்தப் பக்கம் தலைவைத்துப் படுப்பேன்?

 20. virutcham

  சாப்பாட்டிலே ஒரு முடி இருந்தா, பார்த்து சமைக்க மாட்டியா கண்ணில்லையா என்று எல்லாம் கத்தும் கணவன் வர்க்கங்கள் வாரக் கடைசியில் குடும்பத்துடன் pizza ஹட் களில் குடும்பத்துடன் காத்திருந்து ஒத்தை pizzaavukku பர்சை இளைக்கச் செய்து போகும் போது சந்தோஷத்தின் அடையாளமாக (பர்சில் கொஞ்சம் மிச்சம் வைத்த தற்க்காகவேனும்) மணி அடித்துசெல்லும் வழக்கம் இருந்தால் இனிமேலேனும் யோசிக்கலாம்

 21. Ganpat

  விருட்சம் நீங்கள் சொல்வது மிக கடுமையான குற்றசாட்டு.
  ஏதேனும் ஆதாரம் உண்டா?

Leave a Reply

Your email address will not be published.