Categoryகிண்டில்

Pen to Publish 2019 – போட்டி அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில் இம்முறை தமிழுக்கான தேர்வுக் குழுவில் நானும் நண்பர் சரவண கார்த்திகேயனும் இருக்கிறோம். தேர்வு செய்வதெல்லாம் பிற்பாடு நடப்பது. இப்போட்டியில்...

புத்தகங்களின் எதிர்காலம்

பத்ரியின் இந்தக் குறிப்பைப் படித்தது முதல் திரும்பத் திரும்ப இதே சிந்தனையாக இருக்கிறது. அவர் சொல்லியிருப்பது சரி. ரயில், பஸ் பயணங்களில் யாரும் புத்தகம் படிப்பதில்லை இந்நாள்களில். கிண்டில் கருவி என்பது தமிழ்ச் சூழலில் இன்னும் மிகச் சிறுபான்மையினருடைய ஆடம்பரமாகவே கருதப்படுகிறது. கிண்டில் கருவியையாவது காசு கொடுத்து வாங்க வேண்டும். கிண்டில் அளிக்கும் இலவச ஆப்களில் கருவியில் உள்ள சகல வசதிகளுடனும்...

வெட்டி முறித்த காதை

பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில்...

பின் கதைச் சுருக்கம்

இந்தப் புத்தகத்தை நான் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இதை என்னவாக வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. சில கதைகளைப் பற்றிய கட்டுரைகள் என்று சொல்வது அநியாயமாக இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் விரும்பி வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றி, வாசித்து முடித்த உடனேயே சில வரிகள் எழுதும் வழக்கம் இருந்தது. அதைச் சற்று விரித்து எழுதலாம் என்று யோசனை சொன்னவர் கல்கி...

புதிய கிண்டில் பதிப்புகள்

என்னுடைய நாவல்கள் அனைத்தும் இப்போது புதிய முகப்பு / மலிவு விலையில் கிண்டிலில் கிடைக்கின்றன. யதி, பூனைக்கதை நீங்கலாக மற்ற அனைத்தும் ரூ. 100க்கும் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்; அப்படியே செய்திருக்கிறேன். வாங்குவோர் எண்ணிக்கை அதிகமானால் விலை இன்னமும் குறையும். அச்சுப் புத்தகங்களின் விலையேற்றம் வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவரும் இக்காலத்தில் செலவு குறைந்த மின்நூல்...

Buy Kindle EBooks

அச்சுப் புத்தகங்கள் வாங்க

புதிய புத்தகம்

புதியவை

மின்னஞ்சலில் வாசிக்க

இதுவரை

RSS Feeds

Some of the links provided in this website are affiliate links.