Archive2018

யதி – வாசகர் பார்வை 15 [துளசி கோபால்]

அன்புள்ள அனியன் பா.ராகவனுக்கு, யதி வாசித்தேன்.  ஐந்துநாள் தொடர் வாசிப்பு. அதன் பின் மூன்று நாட்கள் ஆச்சு  அதிலிருந்து மீண்டுவர! இதுவரை உங்கள் எழுத்துகளை அங்கொன்றும், இங்கொன்றுமா வாசிச்சிருக்கேனே தவிர , ஒரு முழுத் தொடரா வாசிக்க வாய்ப்பே கிடைக்கலை. யதி வாசகர் கடிதங்கள் பார்த்துட்டுத்தான் அப்படி என்ன இருக்குன்னு உள்ளே போனேன். போனேனா….. அவ்ளோதான். அப்படியே உள்ளே இழுத்துப் போயிருச்சு...

யதி – வாசகர் பார்வை 14 [தர்ஷனா கார்த்திகேயன்]

மனம் என்ற ஒன்றை விட அதி பிரம்மாண்டமான ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வி தான் யதி படித்து முடித்த பின்பு எனக்குள் தோன்றியது. துறத்தல் இத்துணை எளிதானதா? அல்லது இயல்பானதா? சாதாரண இலௌகீக வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டும், தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற ஏதோ ஒன்றைக் குறிவைத்து இடையறாது ஓடிக்கொண்டும் இருக்கும் சராசரி மனிதர்களுக்கு சந்நியாசத்தின் மீது...

யதி – வாசகர் பார்வை 13 [சிவராமன்]

அது 2010 ம் வருடம். துபாயில் ஹாஸ்பிடாலிடி-கட்டுமான நிறுவனமொன்றில் வேலையிலிருந்தபோது, ஸ்வீடனிலிருந்து ஒரு பொறியாளரை இணைய மேம்பாட்டுப் பயிற்சிக்காக தருவித்திருந்தது எங்கள் நிறுவனம். “கெவின் பிஸ்மார்க்” என்ற அந்த ஐரோப்பியரை அறிமுகப்படுத்தியபோது அவரது நெற்றியிலிருந்த திருநீற்றுப்பட்டை ஆச்சர்யப்படுத்தியது. பெரும்பாலும் மேற்கிலிருந்து வருபவர்களுக்கு ஹிந்து ஆன்மிக ஆர்வமென்றால் அது...

யதி – வாசகர் பார்வை 12 [டாக்டர் ஆர். திருநாவுக்கரசு]

நாவலின் கரு ஒரு ஆசாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளைப் பற்றியது. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடி, பெற்ற தாய் தந்தையைத் தவிக்கவிட்டு குடும்பத்தில் இருந்து விலகுகிறார்கள். பெரியவன் விஜய் பற்றிய நிகழ்வோடு ஆரம்பிக்கிறது நாவல். அவன் தம்பிக்கு தரும் அதிர்ச்சியான அனுபவங்கள். அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் நடக்கும் வினோதமான அனுபவங்கள்- Paranormal நிகழ்வுகள். சொரிமுத்து, சர்புதீன் என சில...

யதி – வாசகர் பார்வை 11 [காஞ்சி ரகுராம்]

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா? இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன். இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

Buy Kindle EBooks

அச்சுப் புத்தகங்கள் வாங்க

புதிய புத்தகம்

புதியவை

மின்னஞ்சலில் வாசிக்க

இதுவரை

RSS Feeds

Some of the links provided in this website are affiliate links.