புதியவை

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 11

ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, நா. மகாலிங்கம் அவர்களின் வள்ளலார் – காந்தி மையம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்கினேன். அன்று எனக்குப் பரிசாகக் கிடைத்தது ஒரு புத்தகம். திருவருட்பாவின் உரைநடைப் பகுதி. அன்றிரவே அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி சுமார் பத்து நாள்களில் படித்து முடித்தேன். அப்போது எனக்கு அந்தப் புத்தகம் முழுவதுமாகப் புரிந்தது என்று சொல்ல...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 10

தாமரையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். தாம்பரத்தில் இருந்து அண்ணா சாலை வரை சைக்கிளில் செல்லும் ஒருவனுக்கு சிறுநீர் கழிக்க வழியில் எங்குமே இடம் கிடைக்காது. தவித்துப் போய்விடுவான். கடைசியில் சத்யம் திரையரங்கத்துக்குப் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் கசங்கிக் கிடக்கும் இந்திய வரைபடத் தாள் ஒன்றின்மீது ஆத்திரம் தீரப் பெய்துவிட்டுப் போவான். இந்தக் கதையை எழுதியபோது பதினெட்டு வயது. இன்றும்கூடத் தாம்பரம்...

இன்னொரு முறை வாழ்வது – அபுல் கலாம் ஆசாத்

‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’இற்குள் வெறித்தனமாக வாழத் துவங்கியிருக்கிறேன். ‘சொல்லுங்க பாய்’ எனும் அவருடைய இயல்பான உரையாடலை எழுத்திலும் வைத்து, ‘வூடு’ கட்டி அடித்துச் செல்லும் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நானும் கொஞ்சமாவது வாழ்ந்திருக்கிறேன். அவர் எழுத்து ‘எனது’ சென்னைக்கு உள்ளே சில நிமிடங்கள் சென்று உட்கார்ந்து மெதுவாக சிலவற்றை அசைபோட வைக்கிறது. உங்களுக்கு சென்னையில்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 9

அடையாறு துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு எதிரே முதல் முதலாக ஒரு தொழுநோயாளியைக் கண்டேன். அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கலாம். அந்த நபரின் தோற்றம் அன்று எனக்கு அளித்த அதிர்ச்சி இன்னும் நினைவிருக்கிறது. புதைத்துச் சிதைந்து போன ஒரு பிரேதம் எழுந்து நடமாடத் தொடங்கியது போலிருந்தது. மறக்கவே முடியாது. (இதன் தலைகீழ் உண்மையாக யதியில் பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி ஒன்றை விரிவாக...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 8

தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கும், எனக்கு நண்பர்களாக இருந்த சக மக்குப் பையன்களுக்கும் பொதுவாக ஒரு கவலை இருந்தது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே அது. இந்தக் கவலை பெரும்பாலும் செமஸ்டர் பரீட்சைகள் நெருங்கும்போது சிறிது தீவிரமாக வரும். அதுவரை வாழ்ந்து முடித்த அவல வாழ்வை மொத்தமாக மறந்துவிட்டு, இனியேனும் உருப்படியாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்காக...

அழகும் பொருத்தமும் (எஸ். கார்த்திகேயன்)

“ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்” என்றொரு தொடரை எழுத்தாளர் Pa Raghavan அவரது டாட் காமில் எழுதி வருகிறார். தினம் ஒன்று எழுதுகிறார் போல – இன்று 7 வது அத்தியாயம். ஃபேஸ்புக் ஸ்கிரால் செய்கையில் அவர் பக்கத்தில் 6 வது பாகத்தின் லிங்க் பார்த்து உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து 6 வதை அடையும்போது 2 மணியைத் தாண்டியிருந்தது. தேதி பார்த்து “பேஜ் ரிஃப்ரெஷ்”...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 7

எண்பதுகளின் இறுதி ஆண்டுகளைப் பைங்கிளிப் பத்திரிகைகளின் பொற்காலம் என்று சொல்லலாம். திரைச் சித்ரா, பருவகாலம், மருதம் போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகள் தவிர குறைந்தது முப்பது பெயர் பிரபலமில்லாத, அல்லது பெயரேகூட வேண்டியிருக்காத பத்திரிகைகள் அப்போது சென்னையில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்தன. எல்லாமே மட்கிய தாள்களில் கறுப்பு வெள்ளையில் மட்டுமே அச்சிடப்பட்ட பத்திரிகைகள். சில பத்திரிகைகள் பிளாஸ்டிக்...

கொம்பு முளைத்தவன் வாசிப்பனுபவம்

எழுத்தை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தாளனை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தை தனதாக்கிக்கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு… மிக சிறிய புத்தகம் என்றாலும் இந்தப் புத்தகத்தின் வழியாக பா.ராகவன் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் ஏராளம். நிச்சயம் இது எனக்கான புத்தகம், எனக்கான வழிகாட்டிகளில் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு புத்தகம் தனக்கானது என வாசகன் உணரும்போதே அது வெற்றிபெற்று விடுகிறது...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 6

சரியான வேலை ஒன்று அமைந்திருக்கவில்லை. பல இலக்கியமல்லாத சிற்றிதழ்களில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சம்பளம் கிடைக்குமா என்று சந்தேகமாக இருந்தது. அப்போதெல்லாம் தினத்தந்தியின் வரி விளம்பரப் பகுதியில் நிறைய பத்திரிகை வேலை விளம்பரங்கள் வரும். கண்ணாடி, மூக்குத்தி, செம்பரிதி, புது விடியல் என்று என்னென்னவோ பெயர்களில் வெளியாகிக்கொண்டிருந்த பத்திரிகைகள். அவற்றில் எது ஒன்றையும் நான் பார்த்ததுகூடக் கிடையாது...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 5

ஒரு கேல்குலேட்டர் வாங்குவதற்காக முதல் முதலில் என் தந்தை என்னை பர்மா பஜாருக்கு அழைத்துச் சென்றார். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. சென்னை நகருக்குள் அப்படியொரு பளபளப்பான இடம் இருக்கிறது என்று எனக்கு அதற்குமுன் தெரியாது. நாங்கள் சென்றது இருட்டத் தொடங்கிய மாலை நேரம் என்பதால் கடை விளக்குகளின் வெளிச்சத்தில் பிராந்தியம் இன்னுமே பளபளப்பாகத் தெரிந்தது. கடற்கரை ரயில் நிலையத்துக்கு வெளிப்புறம் நடைபாதை...

Buy Kindle EBooks

அச்சுப் புத்தகங்கள் வாங்க

புதியவை

இதுவரை

மின்னஞ்சலில் வாசிக்க

RSS Feeds

Links