புல்புல்தாரா

கணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல். தனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும்போது அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாள். பெரும் துயரத்துக்கும் அதன் நிழல் படியாத முழு மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட பெருவெளியில் மேற்கொள்ளும் பயணத்தில் அவளுக்குப் புதிர்களின் கவித்துவம் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது. வாழ்வினும் பெரும் புதிர் வேறேது?

இந்நாவல், கல்கியில் தொடராக வெளிவந்தது. தொடருக்கு ஓவியம் வரைந்தவர் ஜெயராஜ். இப்போது இம்மின் பதிப்பின் முகப்புப் படம் வரைந்திருப்பது பி.ஆர். ராஜன். இருவருக்கும் என் நன்றி. ஒரு புதிய பரீட்சார்த்த முயற்சியாக, அச்சுப் புத்தகத்துக்கு முன்பாகவே மின் நூலை வெளியிடுகிறேன். (அச்சுப் பதிப்பு ஜனவரியில் வெளிவரும்.) வாசக ஆதரவு இருந்தால் இவ்வழக்கத்தைத் தொடரலாம்.

O

புல்புல்தாரா ஆகஸ்ட் 15 அன்று கிண்டிலில் வெளியாகிறது. அறிமுக விலை ரூ. 75 மட்டும்.  பிறகு இவ்விலை ரூ. 150 ஆகிவிடும். பதிவு செய்ய இங்கு செல்லவும்.

Books

Buy Kindle EBooks

புதிய நாவல்கள்

புத்தகப் பட்டியல்

முந்தையவை

தொகுப்பு

புதியவை