Novels

இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு கால் உணர்வு உச்சத்திலும் நிலைகொண்டு அலைபாய்வது. இந்த நாவல், துறவிகளின வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது.

கிண்டிலில் வாசிக்க

திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது.
திரைப்படம் – தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல்.

கிண்டிலில் வாசிக்க

இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன? 2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, அடுத்த ஆண்டு பாரதிய பாஷா விருது பெறவும் வழி வகுத்தது.

கிண்டிலில் வாசிக்க

இந்நாவல், வெளிவந்த காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இட ஒதுக்கீட்டு அரசியலில் இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. ‘நான் யார்’ என்னு தேடல் கொண்டவர்கள்; சாதீயக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளிவேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரண சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக்கண்ணாடி.

கிண்டிலில் வாசிக்க

இந்த நாவல் குங்குமம் வார இதழில் தொடராக வெளியானபோது அடைந்த கண்டனங்களும் எதிர்ப்புகளும் கணக்கற்றவை. பெயரிட முடியாத ஓர் உறவின் சிக்கல்களை மிக நுணுக்கமாக விவாதிக்கும் இந்நாவல், சற்றே தடம் பிசகி இருந்தாலும் ஆபாசக் கதையாகியிருக்கும். மிகத் திறமையாக, லாகவமாக, கத்திமேல் நடப்பது போல எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

கிண்டிலில் வாசிக்க

கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தது இது. ஆனால் ஒரு தொடர்கதைக்கான எவ்வித லட்சணமும் இதில் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு கதாநாயகன், நாயகி கூடக் கிடையாது. வெறும் நாய், குரங்கு, அணில், பட்டாம்பூச்சிகளையும் இரண்டு பொடிசுகளையும் வைத்துக்கொண்டு, மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாள்கிறது மெல்லினம். இந்நாவல் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது.

கிண்டிலில் வாசிக்க

சென்னை, பர்மாபஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவலில் கூடியவரை மிகையின்றிக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன். திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக் கதை என்பது சற்று விநோதமான விஷயம்தான். எங்கே போகிறோம் என்று சிந்திக்கக் கூட அவகாசமின்றி நாவல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிற நாயகன், அதே வேகத்தில் நம் பார்வையிலிருந்தும் காணாமல் போவதன் பின்னால் இருக்கிற இருப்பியல் சார்ந்த அபத்தமே இதன் மையம்.

கிண்டிலில் வாசிக்க

தலைவர்கள் வருகிறார்கள், போகிறார்கள். அரசியலில் என்றும் இருப்பவன் தொண்டன் மட்டுமே. இந்நாவலில் சித்திரிக்கப்படும் திராவிட அரசியல், தனது அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக் கோலம் ஏந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க ஒண்ணாததாக இருக்கிறது.

கிண்டிலில் வாசிக்க

எல்லாருடைய பால்யங்களும் ரசனை மிக்கவை. நினைத்தால் இன்பமளிப்பவை. சுவாரசியமானவை. அந்த வயதுகளில் சந்திக்க நேர்கிற துக்கங்களுமேகூடப் பின்னாள்களில் நினைத்து வியக்கவோ, சிரிக்கவோ, சிலிர்க்கவோ எதையோ ஒன்றைச் சேமித்து வைக்கத்தான் செய்யும்.
இது என்னுடைய பால்யம். இது எனக்கே எனக்காக எழுதப்பட்ட கதை. என் பிரத்தியேக சந்தோஷம்.

கிண்டிலில் வாசிக்க

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் ராமேஸ்வரத்தில் அகதிகள் வரத்து அதிகரித்தது. ஒரு மாபெரும் துயரத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தும் தன் இயல்பில் தடம் புரளாத தீவாக அது இருந்தது. தொன்மங்களின் வசீகரத்தை இருப்பியல் பிடுங்கித் தின்னும் பேரவலம் யுத்த பாதிப்பினும் கோரமாக நிகழ்ந்துகொண்டிருந்தது.
அடையாளச் சிக்கல், அங்கு வந்து சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமல்ல; அங்கேயே வசிப்பவர்களுக்கும்தான். ஒரு பெரும் அவல சரித்திரத்தின் சாட்சியாக நின்றவர்கள், ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் அவகாசமின்றிப் பிழைப்புக்கான பேயோட்டத்தில் கரைந்து காணாமல் போகிற கதை இது.

கிண்டிலில் வாசிக்க

சிறுகதைத் தொகுப்புகள்

 

 

Non Fiction →

Books

Buy Kindle EBooks

புதிய நாவல்கள்

புத்தகப் பட்டியல்

முந்தையவை

தொகுப்பு

புதியவை