சுஜாதா கிழக்கில் உதிக்கிறார்

வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகம், சுஜாதாவின் புத்தகங்களை வெளியிடவிருக்கிறது.

சுஜாதாவின் புத்தகங்களின் வரிசையில் முதலில் கீழ்க்கண்ட ஐந்து நூல்கள் வெளியாகின்றன.

* ஆஸ்டின் இல்லம்
* தீண்டும் இன்பம்
* நில்லுங்கள் ராஜாவே
* மீண்டும் ஜீனோ
* நிறமற்ற வானவில்

தமிழ் வாசகர்களின் பெருவரவேற்பைப் பெற்ற இந்த ஐந்து நாவல்களையும்  சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறோம்.

அவ்வண்ணமே ஜெயமோகனின் சில புத்தகங்களையும் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

* இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
* வாழ்விலே ஒருமுறை
* பனி மனிதன்
* நாவல் [கோட்பாடு]

சென்னை புத்தகக் கண்காட்சி நாளை மாலை தொடங்குகிறது. வாசகர்கள் அனைவரையும் கிழக்கு சார்பில் அன்புடன் அழைக்கிறேன். அடுத்த பத்து தினங்களைப் புத்தகக் கண்காட்சியில் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
 

5 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற