மகிழ்ச்சிப் பா.

ஊசிமணி விற்கவில்லை
உசிலைமணி நடிக்கவில்லை
தூசிமண் கண்ணில் படநீ
துயருற்று நடக்கலாமோ.
காசெடுத்து வந்தோரெல்லாம்
கால் கடுக்கச் சுற்ற வேண்டாம்
பேசுகிற பெரியோர்க்கெல்லாம்
பெரியதோர் வணக்கம் போடு.

மேடையில் வீற்றிருக்கும்
மேன்மைசால் மேதைக் கெல்லாம்
கோடையில் குளிர்ச்சியாக
கோலாவைக் காதில் ஊற்று
மாடல்ல மக்கள் எல்லாம்
மதிபெற்ற ஞானவெய்யோன்
ஏடெல்லாம் உள்ளிருக்கு
எடுப்போரே இங்கிருப்பீர்

புத்தகக் காட்சி யென்றால்
புத்தகம் வாங்க வேண்டாம்
அத்தனை அறிவும் இங்கே
அரைத்து உம் செவியில் ஊற்ற
வித்தக வேந்த ரெல்லாம்
விரைந்தோடி வந்தார் காணீர்
மொத்தமாய் எழுந்து நின்று
முகமலர வாழ்த்து வீரே.

பிகு: இன்றைய கிழக்கு டாப் 5 – ஆர்.எஸ்.எஸ்., ராஜராஜ சோழன், முதல் உலகப்போர், கிளியோபாட்ரா, ராஜிவ் கொலை வழக்கு.

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற