அமேசானில் பாரா

சமீபத்தில் இலண்டனில் இருந்து ஒரு வாசகர் என்னுடைய புத்தகங்களை வெளிநாடுகளில் வாங்குவதற்கு என்ன வழி என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

மக்கு மாதிரி அவருக்கு www.nhm.in உரலை அனுப்பி ஆன்லைனில் வாங்குவது எப்படி என்றெல்லாம் அரைகுறைப் பாடம் சொல்லி முழ நீளத்துக்கு பதில் எழுதினேன். மீண்டும் வந்த அவரது பதிலில் இருந்தது ஒரே வரி. அதில் பார்த்துத்தான் கேட்கிறேன், சொத்து முழுவதையும் இழக்காமல் எப்படி வாங்குவது?

சமீபத்தில் பத்ரியின் வலைப்பதிவில்கூட இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் இது தொடர்பான ஒரு சிறு விவாதம் நடைபெற்றது.

அதன்பிறகுதான் விசாரித்து அறிந்தேன். என்னுடையது மட்டுமல்லாமல், new horizon mediaவின் அனைத்துப் புத்தகங்களும் இப்போது அமேசான்.காமில் கிடைக்கின்றன. இந்தியா பிளாசாவிலும் இவை இருக்கின்றன.

அமேசான் விலை விகிதங்கள் எனக்குக் கொஞ்சம் புரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்தியாவிலிருந்து கப்பல் அல்லது விமானம் ஏற்றி அனுப்புவதைக் காட்டிலும் குறைவே என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

அமேசானில் என்னுடைய புத்தகங்கள்

இந்தியா பிளாசாவில் என்னுடைய புத்தகங்கள்
என்.எச்.எம். ஆன்லைன் புத்தகக் கடையில் என்னுடைய புத்தகங்கள்.

9 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற